செய்திகள்

எனது மகள் டென்னிஸ் விளையாட மாட்டாள்- செரீனா நம்பிக்கை

எனது மகள் டென்னிஸ் விளையாட மாட்டாள் என்று பெண் ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #serena

கடந்த வருடம் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபனில் பதக்கம் வென்ற பின்னர், கர்ப்பிணியாக இருந்ததால் டென்னிஸில் இருந்து ஒதுங்கினார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அலெக்சிஸ் ஒலிம்பியா எனப் பெயரிட்டுள்ளார்.

தற்போது மீண்டும் செரீனா டென்னிஸ் களத்திற்கு திரும்பியுள்ளார். விம்பிள்டன் டென்னிஸ் தொடர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். விம்பிள்டன் தொடருக்கான தரநிலையில் முதல் 10 இடத்தில் இருந்த வீராங்கனைகள் தோல்வியடைந்து வெளியேறிவிட்டார்கள். இதனால் செரீனாவிற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT