ஸ்டெஃபி கிராஃப் சாதனையை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் இந்த வருடத்தின் தொடங்கத்தில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாத்தை கைப்பற்றி முறியடித்தார். செரீனா 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
கர்ப்பிணியுடன் ஆஸ்திரேலியா தொடரில் விளையாட செரீனா, அதன்பின் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் விளையாடவில்லை. குழந்தை பெற்ற பின்னர் மீண்டும் டென்னிஸ் களத்திற்கு திரும்புவேன் என்று கூறிய செரீனா, அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் களம் இறங்குவேன் என்ற நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செரீனாவால் மார்கரெட் கோர்ட்டின் சாதனையை முறியடிக்க முடியும் என ஸ்டெஃபி கிராஃப் கூறியுள்ளார்.