அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் பெண்கள் டென்னிஸ் அசோசியேசனின் இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
2017-ம் ஆண்டு ஆஸ்திரேலியா ஓபனுக்குப் பிறகு விளையாடாமல் இருந்து செரீனா வில்லியம்ஸ் இதில் கலந்து கொண்டார். செரீனா வில்லியம்ஸ் கடந்த 17 வருடத்தில் பெரும்பாலும் இண்டியன்வெல்ஸ் தொடரில் விளையாடியது கிடையாது.
தற்போது 3-வது முறையாக தொடக்க ஆட்டத்தில் ஷரினா தியாஸ்-ஐ செரீனா வில்லியம்ஸ் எதிர்கொண்டார். இதில் செரீனா 7-5, 6-3 என நேர்செட் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
சுமார் 15 மாதங்கள் விளையாடாமல் இருந்ததால் செரீனாவிற்கு தரவரிசை வழங்கப்படவில்லை.