செய்திகள்

தரவரிசை பட்டியல் ஜோகோவிச்சுக்கு பின்னடைவு

டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கும் ஜோகோவிச் அடுத்த வாரம் வெளியிடப்படும் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம் பெற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

டென்னிசில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் 12 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற செர்பியாவை சேர்ந்த அவர் கடந்த ஜூலை மாதம் நடந்த விம்பிள்டன் போட்டியின்போது முழங்கையில் காயம் அடைந்தார்.

அதன்பிறகு அவர் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தது. தற்போது தரவரிசை பட்டியலில் 7-வது இருக்கும் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது.

அடுத்த வாரம் வெளியிடப்படும் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் ஜோகோவிச் இடம் பெற முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. பாரீசில் நடந்து வரும் சர்வதேச மாஸ்டர்ஸ் போட்டியில் அர்ஜென்டினா வீரர் மார்ட்ன் டெல் போட்ரோ கால் இறுதிக்கு தகுதி பெற்றார். இதன்மூலம் அவர் வரிசையில் முன்னேறுவதால் ஜோகோவிச்சுக்கு சறுக்கல் ஏற்பட்டு உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஜோகோவிச் முதல் முறையாக முதல் 10 இடங்களுக்கு இடம் பெறாமல் உள்ளார்.

SCROLL FOR NEXT