குண்டும் குழியுமான சாலை 
செய்திகள்

சேந்தமங்கலத்தில் குளம்போல் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

சேந்தமங்கலம் பகுதியில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஜங்களாபுரத்தில் இருந்து நைனாமலை செல்லும் சாலையில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது.

மாலை மலர்

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் பகுதியில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஜங்களாபுரத்தில் இருந்து நைனாமலை செல்லும் சாலையில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்வோர் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. அந்த கடைக்கு சென்று வருவோர் இரவு நேரத்தில் தட்டுத்தடுமாறி சென்று கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.