ஐதரபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான முந்தைய ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை மந்திரியாக பதவி வகித்தவர் சோமாராப்பு சத்தியநாராயணா.
அக்கட்சியில் செல்வாக்கு படைத்த மூத்த தலைவர்கள் வரிசையில் இடம்பெற்றிருந்த இவர் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்நிலையில், தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கட்சியில் இருந்து இன்று விலகி விட்டதாக சத்தியநாராயணா தெரிவித்தார். கட்சியில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் குறைந்து விட்டது. உண்மையான தொண்டர்களுக்கு உரிய மதிப்பு அளிக்கப்படுவதில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.