ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா 
செய்திகள்

இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா நியமனம்

இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக இருக்கும் விஜய் கோகலே பதவிக்காலம் நிறைவடைவதால் புதிய செயலாளராக அமெரிக்காவுக்கான தூதர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

மாலை மலர்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் மந்திரி மற்றும் இணை மந்திரி பதவிக்கு அடுத்தபடியாக வெளியுறவுத்துறை செயலாளர் பதவியும் அவரது பணிகளும் முக்கியத்துவமானது.

இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக இருக்கும் விஜய் கோகலே பதவிக்காலம் விரைவில் நிறைவடைவதால் புதிய செயலாளராக ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

விஜய் கோகலேவிடம் இருந்து வெளியுறவுத்துறை செயலாளருக்கான பொறுப்புகளை 29-1-2020 அன்று ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா ஏற்றுக்கொள்வார் என மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.