கைது 
செய்திகள்

செங்குன்றத்தில் ரூ. 3 லட்சம் கடன் தகராறில் தொழிலாளி கடத்தல் - தந்தை-மகன் கைது

செங்குன்றத்தில் ரூ. 3 லட்சம் கடன் தகராறில் தொழிலாளி கடத்திய தந்தை, மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

செங்குன்றம்:

செங்குன்றத்தை அடுத்த எம்.ஏ. நகர் எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் வாஞ்சிநாதன். இவர் உளுந்தூர்பேட்டையில் தனது அண்ணனுக்கு சொந்தமான சமையல் கியாஸ் கம்பெனியில் வேலை செய்கிறார்.

இவரது மனைவி சுதா எம்.ஏ. நகரில் பானிபூரி கடை வைத்துள்ளார். இவர் கடந்த 5 வருடத்துக்கு முன்பு செங்குன்றத்தை அடுத்த ஆட்டார்தாங்கலை சேர்ந்த பாலமுருகன் என்பவரின் மனைவி மீனாட்சியிடம் ரூ. 3 லட்சம் கடன் வாங்கி இருந்தார். கடனை திரும்ப செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி தனது உறவின ரின் மரணத்துக்காக வாஞ்சி நாதன் உளுந்தூர்பேட்டை யில் இருந்து எம்.ஏ. நகருக்கு வந்தார்.

இதை அறிந்த பாலமுரு கனின் மகன் சஞ்சய் குமார் மற்றும் அவரது கூட் டாளிகள் 6 பேர் வாஞ்சிநாதனை செங்குன்றத்தில் இருந்து, காரில் கடத்தினர். பின்னர் அவரை புழலை அடுத்த காவாங்கரைக்கு கொண்டு சென்று அடித்து உதைத்தனர்.

மேலும் ரூ. 40 லட்சம் கடன் வாங்கியதாக வெற்றுப் பேப்பரில் எழுதி வாஞ்சிநாதனிடம் கையெழுத்து வாங்கியதாக தெரிகிறது.

பணத்தை 12-ந் தேதிக்குள் திருப்பி தராவிட்டால் கொலை செய்துவிடுவோம் எனவும் அவர்கள் மிரட்டல் விடுத்தனர்.

இதற்கிடையே அவர் களிடம் இருந்து தப்பிய வாஞ்சிநாதன் செங்குன்றம் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக இன்ஸ் பெக்டர் ராஜேந்திரன் வழக் குப்பதிவு செய்து பால முருகன், அவரது மகன் சஞ்சய்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். மேலும் தலைமறைவான 5 பேரையும் தேடி வருகின்றனர்.