நகை பறிப்பு 
செய்திகள்

கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் தாலி சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்குன்றம்:

செங்குன்றத்தை அடுத்த பொத்தூர் பாடசாலை தெருவைச் சேர்ந்தவர் பழனி (வயது 63). மீன் வியாபாரியான இவருடைய மனைவி மாரியம்மாள் (58). இவர்கள் இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் ஊத்துக்கோட்டையை அடுத்த மெய்யூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினர்.

செங்குன்றத்தை அடுத்த அலமாதி பால்பண்ணை அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பழனியிடம் முகவரி கேட்பதுபோல் நடித்து பின்னால் அமர்ந்து இருந்த அவரது மனைவி மாரியம்மாளின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்று விட்டனர். இதில் நிலைதடுமாறி கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த மாரியம்மாள், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி சோழவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT