செய்திகள்

செம்மஞ்சேரி அருகே வேலைக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் மகன் தற்கொலை

செம்மஞ்சேரி அருகே வேலைக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சோழிங்கநல்லூர்:

செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் அருள்சாமி. இவரது மகன் ஜான் போஸ்கோ (வயது 25), பெயிண்டர். இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனை அவரது தாய் கண்டித்தார்.

இதனால் மனவேதனை அடைந்த ஜான்போஸ்கோ, மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து செம்மஞ்சேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.