மதுரை:
மதுரையில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆர்.கே. நகரில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. முன்னிலை நிலவரத்தை வைத்து எந்த கருத்தும் சொல்ல முடியாது.
வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் வெற்றி, தோல்வி குறித்து கருத்து சொல்லலாம்.
ஆர்.கே. நகரில் தற்போது முன்னிலையில் இருந்து வரும் தினகரன் வெற்றி பெற்றால் ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு நெருக்கடி என்று சொல்ல முடியாது. அ.தி.மு.க. ஒரு ஆலமரம். யாரும் இந்த இயக்கத்துக்கு நெருக்கடி தர முடியாது.எங்களின் ஒரே எதிரி தி.மு.க. தான்.
இவ்வாறு அவர் கூறினார்.