செய்திகள்

நரிக்குடி அருகே தீக்குளித்து இளம்பெண் தற்கொலை

நரிக்குடி அருகே வேலைக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள ஏ.முக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சோனியா கார்த்தி (வயது 18). இவர் கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தில் உள்ள தனியார் நூற்பு மில்லில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சோனியா காந்தி விடுமுறையில் ஊருக்கு வந்தார். அதன் பிறகு அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனை பெற்றோர் கண்டித்தனர்.

இதனால் மனவேதனை அடைந்த சோனியா காந்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

உடல் கருகிய அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை சோனியாகாந்தி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.