செய்திகள்

சேகர் ரெட்டி கூட்டாளிகள் திண்டுக்கல் ரத்தினம் - ராமச்சந்திரன் அமலாக்கதுறை அலுவலகத்தில் ஆஜர்

சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கில் சேகர்ரெட்டியின் கூட்டாளிகள் திண்டுக்கல் ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோர் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை முன்பு இன்று ஆஜரானார்கள்.

சென்னை:

சென்னையை சேர்ந்த பிரபல காண்டிராக்டர் சேகர்ரெட்டி. கடந்த டிசம்பர் மாதம் இவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது அவரது வீட்டில் இருந்து ஏராளமான பழைய நோட்டுகளும், ரூ.34 கோடி மதிப்பிலான புதிய நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக தொழில் அதிபர் சேகர்ரெட்டி, அவரது கூட்டாளிகளான சீனிவாசலு, பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், ராமச் சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோதமாக ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக அவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இதற்கிடையே சேகர் ரெட்டி கூட்டாளிகள் திண்டுக்கல் ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது.

ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் 3-வது முறையாக சம்மன் அனுப்பியது.

இதை தொடர்ந்து சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கில் சேகர்ரெட்டியின் கூட்டாளிகள் திண்டுக்கல் ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோர் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை முன்பு இன்று ஆஜரானார்கள்.

SCROLL FOR NEXT