சென்னை:
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனால் தமிழக அரசியல்களம் தற்போது சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. பல்வேறு கட்சிகளும் தேர்தல் தொடர்பாக தங்கள் வியூகங்களை வகுக்கத்தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் எனவும், தானும் போட்டியிடுடப்போவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி கொள்கைக்கு எதிராக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக சென்னையில் உள்ள தனது வீட்டின் முன் நின்று சீமான் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
அந்தபின் செய்தியாளர்களை சந்தித்த சீமான், அந்தி வந்தால் நிலவு வருவதை போல இந்தி வந்தால் பிளவு வரும் என்றார். இந்ந்தியை இந்தியா என்ற கட்டமைப்பிற்குள் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியை போல் தமிழையும் நாடெங்கும் படிக்க சொல்வார்களா? என அவர் கேள்வி எழுப்பினார்.
பின்னர் அவரிடம் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்றும் தானும் போட்டியிடுவேன் என்றும் அவர் பதிலளித்தார்.