செய்திகள்

கர்நாடக தேர்தல் முடிந்தாலும் காவிரி வாரியத்தை அமைக்க மாட்டார்கள்- சீமான் பேட்டி

கர்நாடகத்தில் தேர்தல் முடிந்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். #seeman #cauveryissue

மாலை மலர்

திருச்சி:

திருச்சியில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி  மேலாண்மை அமைக்க கோரி தமிழக முதல்வரும், துணை முதல்வரும் சென்னை வந்த பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து மனு  கொடுத்தார்கள். ஆனால் அவர் அது குறித்து எதுவும் பேசவில்லை. ஜெயலலிதா இருந்த போது காவிரி மேலாண்மை வாரியம் என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம் இப்போது மறுக்கிறது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க  உச்சநீதி மன்றம் 6 வார காலம் அவகாசம் கொடுத்தது. அத்தனை நாட்கள் எதுவும்  செய்யாமல் கடைசியில் ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்கிறது. இதன் மூலம் நாடகம் நடத்துகிறார்கள். கால நீட்டிப்பு  என்பது திட்டமிட்டு அவமதிக்கும் செயல். 

நாங்கள் நடத்தும் போராட்டம் எங்களுக்கு ஆனது அல்ல. நமக்கான ஒன்று. கர்நாடகத்தில் தேர்தல் முடிந்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டார்கள். 

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #seeman #cauveryissue