பேரையூர்:
சேடபட்டி போலீசார் கணவாய்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே ஊரை சேர்ந்த ஒச்சாதேவன்(வயது 32) என்பவர் விற்பனை செய்வதற்காக 13 மதுபாட்டில்களை வைத்திருந்தபோது போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இதேபோல் அல்லிகுண்டத்தை சேர்ந்த பாலு(45) என்பவரிடம் இருந்த 7 மதுபாட்டில்களையும், பெரிய கட்டளையை சேர்ந்த தங்கப்பாண்டி என்பவரிடமிருந்து 8 மதுபாட்டில்களையும், போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.