செய்திகள்

சேடப்பட்டி அருகே தொழிலாளி மீது தாக்குதல் - ராணுவ வீரர் உள்பட 4 பேர் கைது

சேடப்பட்டி அருகே தொழிலாளியை தாக்கியதாக 12 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் ராணுவ வீரர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

பேரையூர்:

சேடப்பட்டி போலீஸ் சரகம் மங்கள்ரேவ் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் செல்லப்பாண்டி (வயது 32) தொழிலாளி இவர், பாப்பிநாயக்கன்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிள் ரேஸ் பயிற்சி மேற்கொண்டார்.

இதனை அந்த பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சங்கர் (22) கண்டித்தார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் - கைகலப்பு ஏற்பட்டது.

அதன்பிறகு சங்கர் உள்பட 12 பேர் வந்து செல்லப்பாண்டியை சரமாரியாக தாக்கினர். தலையில் பலத்த காயம் அடைந்த செல்லப்பாண்டி சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் கொடுத்த புகாரின் பேரில் சேடப்பட்டி போலீசார் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சங்கர், செந்தில்பாண்டி (21), முத்துராமலிங்கம், (23), கலையரசன் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர். ராணுவ வீரரான கலையரசன், தற்போது விடுமுறையில் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews

SCROLL FOR NEXT