ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சல் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் ஒன்றான கண்டியின் டிக்ரி காட்டுப் பகுதியில் அதிகளவிலான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பாதுகாப்புப் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அளித்த தகவலின் அடிப்படையில், கண்டி மாவட்ட போலீசார் மற்றும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் இணைந்து கூட்டு சோதனை நடத்தியதாக கண்டி காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வினி குமார் சின்கா தெரிவித்துள்ளார். இந்த ஆயுதங்களை கொண்டு பாதுகாப்புப் படை முகாம்கள் மீது தாக்குதல் நடத்த நக்சல்கள் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.