கோப்பு படம் 
செய்திகள்

டெங்கு கொசு உற்பத்தி - தொழிற்சாலைக்கு சீல் வைப்பு

பூந்தமல்லி அருகே தொழிற்சாலையில் டெங்கு கொசு உற்பத்தி கண்டறியப்பட்டதையடுத்து ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

மாலை மலர்

பூந்தமல்லி:

பூந்தமல்லி நகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில் ஒரு பகுதியாக நகராட்சி கமி‌ஷனர் டிட்டோ தலைமையில் துணை ஆட்சியர் சையத்பாரி, சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளிலும் இன்று காலை வீடுகள், தொழிற்சாலைகள், பள்ளிகளில் மருத்துவ குழுவுடன் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் 2-வது வார்டுக்கு உட்பட்ட பாரிவாக்கம் சாலையில் உள்ள பாட்டில் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் அங்கு ஏராளமான டெங்கு கொசு புழுக்கள் கண்டறிப்பட்டது.

இதையடுத்து அந்த தொழிற்சாலைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தொழிற்சாலையில் முறையான பராமரிப்பு இல்லாதது தெரிய வந்தது. எனவே அந்த தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.

கடந்த ஆண்டும் இந்த தொழிற்சாலைக்கு 25 ஆயிரம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.