நூற்பாலைக்கு சீல் 
செய்திகள்

திருமங்கலம் அருகே ரூ.6½ கோடி கடனை திருப்பி செலுத்தாத நூற்பாலைக்கு சீல்

திருமங்கலம் அருகே ரூ. 6.50 கோடி கடன் வாங்கி திருப்பி செலுத்தாத தனியார் நூற்பு ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மாலை மலர்

பேரையூர்:

திருமங்கலம்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் டி.புதுப்பட்டி அருகே தனியார் நூற்பாலை உள்ளது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆலையின் நிர்வாகம் தனியார் வங்கியிடம் கடந்த 2010-ம் ஆண்டு ரூ. 6.50 கோடி கடன் பெற்றது.

இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு கடன் தொகையை திருப்பி செலுத்தாத காரணத்தினால் தனியார் வங்கியின் அதிகாரிகள் சர்வதேச சொத்து புனரமைப்பு நிறுவனத்தின் மூலம் தேசிய தீர்ப்பாயம் நிறுவன சட்ட தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரி குணசேகரன் தலைமையில் நூற்பாலைக்கு வந்து எந்திரங்கள் மற்றும் கட்டிடங்களை ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் நூற்பாலைக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

ரூ. 6.50 கோடி கடன் வாங்கி திருப்பி செலுத்தாத தனியார் நூற்பு ஆலைக்கு சீல் வைத்ததால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கேள்விக் குறியாகியுள்ளது.