செய்திகள்

ஒக்கி புயல்: கன்னியாகுமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை

ஒக்கி புயலால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதால், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை, நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

அரபிக்கடலில் ஒருவான ஒக்கி புயல் தமிழகத்தின் கன்னியாகுமரி மற்றும் கேரளாவின் தெற்கு மாவட்டங்களில் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் மின் வினியோகம் தடைப்பட்டுள்ளது. சீரமைப்பு மற்றும் மீட்பு பணிகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.