விபத்து 
செய்திகள்

அன்னூர் அருகே பள்ளி வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி

அன்னூர் அருகே பள்ளி வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

கோவை:

கோவை பூ மார்க்கெட் அருகே உள்ள சித்தி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் ஹரிநாத் (வயது 20). இவர் துடியலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் யஸ்வந்த் (21).

சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் அன்னூர்-சத்தி ரோட்டில் சென்றனர். மோட்டார் சைக்கிளை ஹரிநாத் ஓட்டிச் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த பள்ளி வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது வேனின் சக்கரம் ஹரிநாத் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ஹரிநாத் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய யஸ்வந்தை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.