செய்திகள்

கபிஸ்தலம் அருகே பள்ளி மாணவர் தீக்குளித்து தற்கொலை

கபிஸ்தலம் அருகே தேர்வில் மதிப்பெண் குறைந்ததை பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகே உள்ள கருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் இவரது மகன் தினேஷ்குமார் (வயது 14). இவர் உமையாள்புரத்தில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் தினேஷ்குமார் குறைவான மதிப்பெண் எடுத்தார். இதனால் அவரை பெற்றோர் ஏன் குறைவான மதிப்பெண் எடுத்தாய்? என திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த தினேஷ்குமார் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய நிலையில் இருந்த தினேஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை தினேஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கபிஸ்தலம் போலீசில் புகார் செய்யப்பட்டது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.