மாயம் 
செய்திகள்

கரூரில் பள்ளி மாணவி மாயம்

கரூரில் பள்ளி மாணவி மாயமானது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

கரூர்:

கரூர் தாந்தோணிமலையை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகள் ஷர்மிளா (வயது 16). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. 

அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் தாந்தோணிமலை போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து மாயமான பள்ளி மாணவியை தேடி வருகிறார்.