உயிரிழப்பு 
செய்திகள்

நாமகிரிப்பேட்டை அருகே தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

நாமகிரிப்பேட்டை அருகே தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

நாமகிரிப்பேட்டை:

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள காக்காவேரி பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். மெக்கானிக். இவரது மகன் ஜாம் எட்வர்டு (வயது 16). இவன் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் நேற்று மாணவன் ஜாம் எட்வர்டு தனது நண்பர்களுடன் சேர்ந்து காக்காவேரி அருகே உள்ள பூசாரிபாளையம் ஏரியில் குளிக்க சென்றான். அவர்கள் ஏரியில் இறங்கி ஆனந்தமாக குளித்து கொண்டிருந்தனர்

அப்போது திடீரென ஜாம் எட்வர்டு தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து தகவல் அறிந்த நாமகிரிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலகவதி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் தண்ணீரில் மூழ்கி பலியான மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.