செய்திகள்

உத்தமபாளையம் அருகே வீட்டு சுவர் இடிந்து பள்ளி பஸ் டிரைவர் பலி

தேனி அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளி பஸ் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தேனி:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பாறை மேடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 61). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக இருந்தார். கடந்த சில தினங்களாக பெய்த மழைக்கு இவரது வீடு சேதமாகியிருந்தது.

சம்பவத்தன்று வீட்டுக்கு சாப்பிட வந்த சின்னப்பன் மீது வீட்டின் சுவர் இடிந்த விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சின்னப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.