செய்திகள்

சிறுமியை கிண்டல் செய்ததற்காக நிர்வாணமாக சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட பள்ளி சிறுவர்கள்

மராட்டிய மாநிலத்தில் சிறுமியை கிண்டல் செய்த குற்றத்திற்காக இரு பள்ளிச் சிறுவர்கள் சாலையில் நிர்வாணமாக அடித்து, இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

மும்பை:

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் வாஜ்ரி மால்வாடி என்ற பகுதியைச் சேர்ந்த இரு பள்ளிச் சிறுவர்கள், உடன் படிக்கும் சிறுமியை கிண்டல் செய்துள்ளனர். இதனால், கொதிப்படைந்த அச்சிறுமியின் தந்தை மற்றும் உறவினர் 3 பேர் சேர்ந்து கடந்த 16-ம் தேதி இரு சிறுவர்களையும் அடித்து, உதைத்து உடைகளை அவிழ்த்து சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்றுள்ளனர்.

சிறுவர்களை நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் போலீசில் சென்று புகாரளித்தார். புகாரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சிறுமியின் தந்தை உள்ளிட்ட நால்வரை கைது செய்தனர்.

அவர்கள் மீது அடித்து துன்புறுத்துதல், பொது இடங்களில் மானபங்கப்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.