செய்திகள்

குஜராத் கலவரத்தில் சேதம் அடைந்த மசூதிகளை அரசு கட்டித் தர தேவையில்லை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

குஜராத் கலவரத்தில் சேதம் அடைந்த மசூதிகளை அரசு செலவில் கட்டித் தர வேண்டும் என்று குஜராத் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்துக்கு பிறகு குஜராத் மாநிலத்தில் பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான 

இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். பொதுச் சொத்துக்கள் பெருமளவில் சேதப்படுத்தப்பட்டது. மசூதிகள் இடித்து தள்ளப்பட்டன. இந்த கலவரம் 

தொடர்பான வழக்கு குஜராத் கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

இதனிடையே, கலவரத்தில் பாதிக்கப்பட்ட மத வழிபாட்டு தலங்களை(மசூதி) அரசு செலவில் கட்டி தர வேண்டும் என்று கடந்த 2012-ம் ஆண்டு குஜராத் ஐகோர்ட் உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை எதிர்த்து மகாராஷ்டிர அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் விசாரணைகள் அனைத்தும் ஏற்கனவே 

முடிவடைந்து விட்டது. விசாரணையின் போது, குஜராத் அரசு மற்றும் இதர தரப்பினர் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்தனர். 

இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் பிரபுல்லா சந்திர பண்ட், சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று உத்தரவை பிறப்பித்தது. 

அப்போது, கலவரத்தில் பாதிக்கப்பட்ட மத சம்பந்தமான வழிபாட்டு தலங்களை அரசு கட்டித் தர வேண்டும் என்ற மும்பை ஐகோர்ட்டு உத்தரவை ரத்து 

செய்தனர்.

இது தொடர்பாக குஜராத் அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, “கலவரத்தில் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க மாநில 

அரசிடம் ஏற்கனவே திட்டம் உள்ளது. அரசின் திட்டத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது” என்றார்.

தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பொறுப்பேற்ற பிறகு வழங்கியுள்ள முதல் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.