செய்திகள்

அரசியல் சாசன அமர்வில் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை ஆதார் கட்டாயமில்லை

ஆதார் கட்டாயம் தொடர்பான வழக்குகள் அரசியல் சாசன அமர்வில் நிலுவையில் உள்ள நிலையில், தீர்ப்பு வரும் வரை ஆதார் கட்டாயமில்லை என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. #Aadhaar

புதுடெல்லி:

வங்கிக்கணக்கு, செல்போன் எண் ஆகியவற்றுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்தது. இதற்கான இறுதிக்காலக்கெடு வரும் மார்ச் 31 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஒன்றாக இணைத்து அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகின்றது.

இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை ஆதார் இணைப்பது கட்டாயமில்லை என சுப்ரீம் கோர்ட்டு இன்று தெரிவித்துள்ளது. #Aadhaar #TamilNews

SCROLL FOR NEXT