சுப்ரீம் கோர்ட் 
செய்திகள்

சென்னை- சேலம் 8 வழிச்சாலை தொடர்பான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

சென்னை- சேலம் 8 வழிச்சாலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

விவசாயிகளின் எதிர்ப்பை தொடர்ந்து, சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் முன்அனுமதி தேவையில்லை என பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.