உச்ச நீதிமன்றம் 
செய்திகள்

இஎம்ஐ மீதான வட்டி தள்ளுபடி செய்யப்படுமா? - 3 நாளில் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆறு மாத சலுகை காலத்தில் கடன் தவணைகள் மீதான வட்டி தள்ளுபடி செய்யப்படுமா? என்பது குறித்து முன்று நாளில் முடிவு எடுக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கால் வேலைவாய்ப்புகளை இழந்து அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டதால், வங்கிகளில் பெற்ற கடனுக்கான தவணையை செலுத்துவதற்கு 6 மாத கால அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. ஆனால் இந்த சலுகை காலத்தில் வட்டி விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதில், வட்டியை தள்ளுபடி செய்வது விவேகமானதாக இருக்காது என்றும், அப்படி செய்தால் வங்கிகளின் நிதி நம்பகத்தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கும், டெபாசிட் செய்தவர்களையும் பாதிக்கும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வங்கிக் கடன் மாத தவணைத் தொகை வட்டி மீது வங்கிகள் வட்டி வசூலிக்கலாமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

SCROLL FOR NEXT