செய்திகள்

ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் சரிபார்க்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

வாக்கு எண்ணிக்கையின்போது வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளுடன், விவிபாட் எந்திரங்களின் அனைத்து ஒப்புகைச் சீட்டுகளையும் சரிபார்க்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மாலை மலர்

வாக்கு எண்ணிக்கையின் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும், 100 சதவீதம் இந்த நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த ஒரு அமைப்பு பொதுநல மனுவாக தாக்கல் செய்தது.

இந்த மனு, உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே போன்ற வழக்கு தலைமை நீதிபதி முன் விசாரணைக்கு வந்து, அந்த வழக்கில் தீர்ப்பும் வழங்கப்பட்டுவிட்டது எனகூறி மனுவை  விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.