இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த். இவர் ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 2013-ம் ஆண்டு நடைபெற்ற சீசனில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் உள்பட மூன்று வீரர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை அடுத்து, ஸ்ரீசாந்த் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, பிசிசிஐ அவருக்கு கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடைவிதித்தது.
மேலும், இதர நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட பிசிசிஐ தடையில்லா சான்று தர மறுப்பதாகவும், இதர நாடுகளில் சென்று விளையாட அனுமதி வேண்டியும் ஸ்ரீசாந்த் மனு அளித்திருந்தார்.