புதுடெல்லி:
தனி கோர்ட்டுகள் அமைத்து ஊழல் புகார்களை விசாரிக்க வகை செய்யும் லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
இதை ஏற்று பல மாநில அரசுகள் தங்கள் சட்டசபையில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றி லோக் ஆயுக்தா நீதிமன்றங்களை நிறுவி உள்ளது. ஆனால் தமிழகம் உள்பட 14 மாநிலங்களில் இன்னும் லோக் ஆயுக்தா அமைக்கப்படவில்லை.
இதையடுத்து தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்க உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது போல் அந்தந்த மாநிலங்களில் உள்ள ஐகோர்ட்டுகளிலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்குகள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இன்று இந்த மனுக்கள் மீது விசாரணை நடந்தது. அப்போது பல மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைக்கப்பட்ட நிலையில் தமிழகம் உள்பட 14 மாநிலங்களில் லோக் ஆயுக்தா நியமிக்கப்படாதது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக 14 மாநில தலைமைச் செயலாளர்கள் காரணம் எதையும் சொல்லாமல் 2 வாரங்களில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். #Tamilnews