செய்திகள்

13 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 8 மாத கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி

மும்பையில் கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 8 மாத கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் இன்று அனுமதி அளித்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

மும்பையில் வசித்துவரும் ஏழாம் வகுப்பு மாணவி கற்பழிப்பு சம்பவத்தில் கருவுற்றாள். 20 வாரங்களுக்கு மேல் வளர்ச்சி அடைந்த கருவை கலைப்பதற்கு சட்டம் அனுமதிக்காத நிலையில், அவளது வயிற்றில் வளரும் 32 வார கருவை கலைப்பதற்கு அனுமதிகோரி பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தனர்.

இந்த வழக்கை முன்னர் விசாரித்த சுப்ரீம் கோர்ட், இந்த கருக்கலைப்புக்கு அந்த சிறுமியின் உடல்நிலை ஒத்துழைக்குமா? என்று கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மும்பை ஜே.ஜே. மருத்துவமனைக்கு உத்தரவிட்டிருந்தது. அந்த மருத்துவமனை அளித்த அறிக்கையை இன்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமிதவா ராய், கன்வில்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதன் அடிப்படையில் அந்த 13 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 8 மாத கருவை கலைக்க இன்று அனுமதி அளித்தனர். வரும் 7-ம் தேதி ஆஸ்பத்தியில் அனுமதிக்கவும், 8-ம் தேதி கருக்கலைப்பு செய்யுமாறும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.