செய்திகள்

8 நாட்களாகியும் உதவியாளர் இல்லாமல் சிகிச்சை பெறும் சயன்

கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள சயனுக்கு உதவியாளர்கள் யாரும் இல்லாமல் டாக்டர்களின் கண்காணிப்பிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

மாலை மலர்

கொடநாடு வழக்கில் முக்கியமானவராக கருதப்படும் கோவையை சேர்ந்த சயன் கடந்த 24-ந் தேதி கார் விபத்தில் சிக்கினார். அவரது மனைவி வினுபிரியா, மகள் நீனு ஆகியோர் விபத்தில் பலியான நிலையில் சயன் படுகாயத்துடன் தப்பினார். கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு இன்று 8-வது நாளாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இன்று வரை சயனை பார்க்க அவரது குடும்பத்தினரோ, உறவினர்களோ யாரும் வரவில்லை. சயன் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்தவர் என்பதால் அவரது பெற்றோர் கூட அவரை பார்க்க வரவில்லை. சயனை பார்க்க வந்தால் தேவையில்லாமல் போலீஸ் விசாரணையை சந்திக்க வேண்டியது வரும் என்பதால் உறவினர்களும் அவரை பார்க்க முன்வரவில்லை. இதனால் உதவியாளர்கள் யாரும் இல்லாமல் டாக்டர்களின் கண்காணிப்பிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.