முகமது ஹபீஸ் 
செய்திகள்

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: தென்ஆப்பிரிக்காவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்

போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான். #SAvPAK

மாலை மலர்

பின்னர் 267 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரரான பகர் சமான் 25 ரன்னில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 86 ரன்கள் குவித்தார். பாபர் ஆசம் 49 ரன்கள் அடித்தார்.


இமாம்-உல்-ஹக்

அனுபவ வீரர் முகமது ஹபீஸ் 63 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 71 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க பாகிஸ்தான் 49.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.