ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது கிடையாது என்ற வரலாறு உள்ளது. இந்த வரலாறு மாற்றப்படக் கூடாது என ரசிகர்கள் விரும்பினார்கள். இந்திய அணி வீரர்களும் எப்படியாவது கடைசி போட்டியில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் களம் இறங்கினார்கள்.
பந்து வீச்சுக்கு மிகவும் சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் தேர்வு செய்ததற்கு கடும் விமர்சனம் எழுந்தது. அதை பொறுப்படுத்தாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். வழக்கம்போல் பந்து வீச்சாளர்கள் அசத்த இந்தியா 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய அணி கேப்டன் விராட், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோர் டெஸ்ட் வெற்றியை கொண்டியததை தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.