செய்திகள்

கோலியை காலி பண்ண தீவிர யோசனையில் இருக்கும் கிறிஸ்மோரீஸ்

இந்திய அணி கேப்டன் வீராட் கோலியை முன்னதாக அவுட் செய்யவே நாங்கள் விரும்புகிறோம் என தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ்மோரீஸ் கூறியுள்ளார். #SAvIND #INDvSA

மாலை மலர்

ஜோகன்ஸ்பர்க்:

ஒருநாள் தொடரை இழக்காமல் இருக்க இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்கிறது. ஒவ்வொரு வீரருக்கும் நெருக்கடி உள்ளது.

இந்திய அணி கேப்டன் வீராட் கோலி எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறார். அவரை முன்னதாக அவுட் செய்யவே நாங்கள் விரும்புகிறோம். அவர் பேட்டிங்கில் மிகவும் நல்ல திறமையுடன் இருக்கிறார். ஒவ்வொரு நாட்டுக்கும் எதிராகவும் அவர் சதம் அடித்தது சிறப்பானது.