செய்திகள்

கேப் டவுன் டெஸ்டில் இந்தியா பந்து வீச்சு: பும்ரா அறிமுகம்- ரோகித் உள்ளே, ரகானே வெளியே

கேப் டவுனில் நடைபெறும் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா டாஸ் தோற்று பீல்டிங் செய்கிறது. பும்ரா அறிமுகமாகியுள்ளார். #SAvIND

மாலை மலர்

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் அபாரமாக விளையாடி வரும் பும்ரா, முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியுள்ளார். அவருக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி பிசிசிஐ-யின் டெஸ்ட் தொப்பியை வழங்கினார். இந்திய அணிக்காக விளையாடும் 290-வது டெஸ்ட் வீரர் இவராவார்.

துணைக் கேப்டன் ரகானேவிற்கு இடம் கிடைக்கவில்லை. ரோகித் சர்மா அணியில் இடம்பிடித்துள்ளார். ஹர்திக் பாண்டியாவுடன் இந்தியா ஐந்து பேட்ஸ்மேன்களுடன் விளையாடுகிறது.

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. தவான், 2. முரளி விஜய், 3. புஜாரா, 4. விராட் கோலி, 5. ரோகித் சர்மா, 6. ஹர்திக் பாண்டியா, 7. சகா, 8. அஸ்வின், 9. பும்ரா, 10. மொகமது ஷமி, 11. புவனேஷ்வர் குமார்.

தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-