பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா திணறியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் அடித்திருந்தது. டி காக் 63 ரன்னுடனும், பிலாண்டர் 27 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஸ்டூவர்ட் பிராட் மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் அனல் பறக்கும் வகையில் பந்து வீசினர். டி காக், பிலாண்டர் ஆகியோர் நேற்றைய ரன்னிலேயே ஆட்டமிழந்தனர். மகாராஜ் டக்அவுட் ஆனார். ரபடா 1 ரன் எடுக்க தென்ஆப்பிரிக்கா 209 ரன்னில் சுருண்டு பலோ-ஆன் ஆனது. இன்று 1 ரன் மட்டுமே எடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்தது தென்ஆப்பிரிக்கா.