செய்திகள்

பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர்கள் கலக்கல்

தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் கம்மின்ஸ், ஹசில்வுட் சிறப்பாக பந்து வீசி டெஸ்ட் போட்டி சவாலுக்கு தயார் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். SAvAUS

மாலை மலர்

இந்த ஆட்டம் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி கேப்டன் சோண்டோ பேட்டிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலியாவின் ஹசில்வுட் மற்றும் கம்மின்ஸ் வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி வீரர்கள் தடுமாறினார்கள். தொடக்க வீரர் ஹம்சா 44 ரன்களும், 3-வது வீரர் ப்ரூயின் 46 ரன்களும், முத்துசாமி 36 ரன்களும் எடுக்க, 58.5 ஓவரில் 220 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க் 1 விக்கெட் வீழ்த்தினாலும், ஸ்விங் ஸ்பெஷலிஸ்ட் பந்து வீச்சாளர் ஹசில்வுட் 3 விக்கெட்டும், வேகப்பந்து அச்சுறுத்தல் வீரர் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், மிட்செல் மார்ஷ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார். 10 விக்கெட்டுக்களையும் வேகப்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள் கவாஜா (22), ஹேண்ட்ஸ்காம்ப் (0), ஸ்மித் (23) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் 4-வது விக்கெட்டுக்கு தொடக்க வீரர் பான்கிராப்ட் உடன் ஷேன் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்திருந்தது. பானகிராப்ட் 24 ரன்னுடனும், ஷேன் மார்ஷ் 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.