செய்திகள்

7 பந்தில் 4 விக்கெட்- ஆஸ்திரேலியாவை ஆட்டம் காண வைத்த ரபாடா

போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் 7 பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி ரபடா ஆஸ்திரேலியாவை ஆட்டம் காண வைத்தார். #SAvAUS

மாலை மலர்

வார்னர் அரைசதத்தால் ஆஸ்திரேலியா முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை 26.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் சேர்த்தது. பான்கிராப்ட் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். வார்னர் 50 ரன்னுடனும் களத்தில் இருந்தார்.

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் வார்னர், கவாஜா ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினார்கள். கவாஜா 4 ரன்கள் எடுத்த நிலையில் பிலாண்டர் பந்தில் ஆட்டமிழந்தார். வார்னர் 63 ரன்கள் எடுத்த நிலையில் நிகிடி பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

4-வது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் ஷேன் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குபிடித்து விளையாடியது. தேனீர் இடைவேளைக்கு சற்று முன் ஸ்மித் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ரபாடா வீசிய 52-வது ஓவரின் கடைசி பந்தில் எல்.டபிள்யூ. ஆனார்.

54-வது ஓவரை ராபாடா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ஷேன் மார்ஷ் அடுத்த பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 4-வது பந்தில் பவுண்டரி அடித்து ஐந்தாவது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அத்துடன் தேனீர் இடைவேளை விடப்பட்டது.

தேனீர் இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தொடங்கினார். டபாடா 54-வது ஓவரின் கடைசி பந்தை வீசினார். இதில் கம்மின்ஸ் ஆட்டமிழந்தார். இதனால் ரபாடா 7 பந்தில் நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றி, ஆஸ்திரேலியாவை ஆட்டம் காண வைத்தார்.