செய்திகள்

ஸ்டார்க் வேகத்தில் நிலைகுலைந்த தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள்

டர்பனில் நடைபெற்று வரும் டெஸ்டின் முதல் இன்னிங்சில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட் வீழ்த்த தென்ஆப்பிரிக்கா 162 ரன்னில் சுருண்டது. #SAvAUS

மாலை மலர்

பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. டீன் எல்கர் மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். எல்கர் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அம்லா ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இந்த இரண்டு விக்கெட்டுக்களையும் ஒரே ஓவரில் வீழ்த்தி நாதன் லயன் தென்ஆப்பிரிக்காவிற்கு அதிர்ச்சி அளித்தார்.

3-வது விக்கெட்டுக்கு மார்கிராம் உடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். டி வில்லியர்ஸ் ஒருபுறம் நிலைத்து நிற்க மறுபுறம் விக்கெட்டுக்கள் சரிய ஆரம்பித்தது. மார்கிராம் 32 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் வந்த கேப்டன் டு பிளிசிஸை 15 ரன்னில் வெளியேற்றிய ஸ்டார்க், டி ப்ருயினை 6 ரன்னில் வெளியேற்றினார். விக்கெட் கீப்பர் டி காக்கை 20 ரன்னில் நாதன் லயன் போல்டாக்க, மகாராஜை ஹசில்வுட் வெளியேற்றினார்.