பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா கவாஜா அரைசதம் அடித்த போதிலும் மற்ற வீரர்கள் சொதப்பியதால் நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்திருந்தது. டிம் பெய்ன் 5 ரன்னுடனும், பேட் கம்மின்ஸ் 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டிம் பெய்ன், கம்மின்ஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தனர். இருவராலும் அரைசதங்கள்தான் அடிக்க முடிந்தது. பெய்ன் 62 ரன்னிலும், கம்மின்ஸ் 50 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த லயன் 8 ரன்னிலும், சேயர்ஸ் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 221 ரன்னில் ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனது.
ஆனால் தென்ஆப்பிரிக்கா பாலோ-ஆன் கொடுக்காமல் 267 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் மார்கிராம் 37 ரன்னிலும், அடுத்து வந்த அம்லா 16 ரன்னிலும், ஏபி டி வில்லியர்ஸ் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரர் டீன் எல்கருடன் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3-வதுநாள் ஆட்டம் முடியும் வரை தாக்குப்பிடித்து விளையாடிது. 3-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. டீன் எல்கர் 39 ரன்னுடனும், டு பிளிசிஸ் 34 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.