அப்துல் அஜிஸ் அல்-ஃபக்ம் 
செய்திகள்

சவுதி அரேபியா மன்னரின் மெய்க்காப்பாளர் சுட்டுக் கொலை

சவுதி அரேபியா நாட்டு மன்னரின் நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளர் அவரது நண்பரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

சவுதி அரேபியா நாட்டு முன்னாள் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல் சவுத்-தின் மெய்க்காப்பாளராக பணியாற்றியவர் அப்துல் அஜிஸ் அல்-ஃபக்ம்.

அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் 23-1-2015 அன்று இறந்தபின்னர் அவரது மகனும் தற்போதைய மன்னருமான சல்மான் பின் அப்துல் அஜிஸ் சவுத்-தின் நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளராக அப்துல் அஜிஸ் அல்-ஃபக்ம் இருந்து வந்தார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அப்துல் அஜிஸ் அல்-ஃபக்ம் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

SCROLL FOR NEXT