சவுதி அரேபியா நாட்டில் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள மன்னர் சல்மான் தீர்மானித்தார். அதேபோல், பழமைவாதத்தில் இருந்து சற்று விலகி, முற்போக்கு பாதையில் நாட்டை முன்னெடுத்து செல்லவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இதைதொடர்ந்து, சினிமா திரையரங்கங்கள், இசை நிகழ்ச்சிகள் நடத்தும் கலையரங்கங்கள் உருவாக தொடங்கியுள்ளன. எனவே, இவற்றை எல்லாம் கட்டுப்படுத்தி, நிர்வகிக்க கலாசாரத்துறை என்ற அமைப்பு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் தொழிலாளர் நலத்துறை மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை மந்திரி அலி பின் நாசெர் அல்-காபிஸ் நீக்கப்பட்டுள்ளார். அந்த பதவியில் அஹமெத் பின் சுலெய்மான் அல்-ராஹ்ஜி என்பவரை நியமித்து மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளதாக சவுதி மன்னர் மாளிகை இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Saudiking #Saudinewministers