கைது 
செய்திகள்

சாத்தூர் அருகே புகையிலை விற்ற 2 பேர் கைது

சாத்தூர் அருகே புகையிலை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாத்தூர்:

சாத்தூர் அருகே இருக்கன்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை விற்ற அதே கிராமத்தை சேர்ந்த சுந்தரம் (வயது 60) என்பவரை போலீசார் கைது செய்தனர். அதேபோல நத்ததுத்துபட்டி செல்லும் வழியில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலை விற்ற நத்ததுத்துபட்டி கிராமத்தை சேர்ந்த நாராயணன் (58) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து புகையிலை பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT