செய்திகள்

ஜெயலலிதா மரண விசாரணை - ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகனராவிடம் சசிகலா வக்கீல் குறுக்கு விசாரணை

ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் தலைமை செயலாளர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகனராவிடம் சசிகலா வக்கீல் குறுக்கு விசாரணை நடத்தினார். #Jayalalithadeathinquiry

மாலை மலர்

சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணை ஆணையத்தில் சசிகலாவுக்கு எதிராக புகார் தெரிவித்தவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி அனுமதி அளித்து இருந்தார்.

ஓமாந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் நாராயணபாபு, முன்னாள் மருத்துவக் கல்வி இயக்குனர் விமலா, டாக்டர்கள் ஆர்.முத்துசெல்வம், பி.கலா, பிரிட்டா, பி.தர்மராஜன், பி.பாலாஜி, எம்.என்.சங்கர் ஆகியோரிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை நடத்தினார்.

இன்று முன்னாள் தலைமை செயலாளர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராம மோகனராவ் மற்றும் டாக்டர்கள் முரளிதரன், தினேஷ் ஆகியோர் தனித்தனியாக ஆஜரானார்கள். அவர்களிடம் சசிகலா வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தபோது அதில் தங்களுடைய பணிகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அவர் கேட்டார். #Jayalalithadeathinquiry