செய்திகள்

சசிகலா வாக்குமூலம் ஆடியோவில் பதிவு

சிறையில் எனக்கு எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை என்று சசிகலா அளித்த வாக்குமூலத்தை உயர் மட்ட குழுவினர் ஆடியோவில் பதிவு செய்து கொண்டனர்.

பெங்களூரு:

சசிகலா உயர்மட்ட குழுவிடம் வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்குமூலத்தில் தனக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட வில்லை. எனக்கு உடல் நிலை மோசமானது. எழுந்திருக்க முடியவில்லை. உடல் சோர்வடைந்தது. மயக்கம் வந்தது.

இதையடுத்து டாக்டர்கள் வந்து பரிசோதித்து எனக்கு ரத்த அழுத்தம் இருப்பதாக தெரிவித்தனர். இதனால் சிறை துறையில் அனுமதி பெற்று, நோய் எதிர்ப்பு சக்திகளை தாங்கக் கூடிய மருந்து, மாத்திரைகள், கஞ்சி ஆகியவற்றை மட்டும் தான் வெளியில் இருந்து வாங்கி வந்தனர். மற்றபடி சிறையில் எனக்கு  எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை என கூறியிருந்தார். 

சசிகலா அளித்த இந்த வாக்குமூலத்தை உயர் மட்ட குழுவினர் ஆடியோவில் பதிவு செய்து கொண்டனர். தற்போது விசாரணை அறிக்கை தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதால் இந்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய தாமதம் ஆகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.